கோவில் திருவிழாவில் ஊ சொல்றியா மாமா! ரசிகர்கள் தொல்லையால் கடுப்பான ஆண்ட்ரியா! ”லேசான” தடியடிதானாம்
சேலம் : கோவில் திருவிழாவில் பாட வந்த நடிகை ஆண்ட்ரியாவை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்ட நிலையில் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
படத்தைவிட படத்தில் இடம்பெற்றிருந்த சமந்தா வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பெரும் வெற்றி பெற்றது. ஆண்டிரியாவின் ஹஸ்கி வாய்ஸும், சமந்தாவின் கிறுக்கேற்றும் நடனமும் பாடலை உலக அளவில் கொண்டு சென்றது.

நடிகை ஆண்ட்ரியா
அதற்கு ஆண்ட்ரியா செல்லும் இடமெல்லாம் இந்த பாடலை பாட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தி கேட்கும் அளவுக்கு ட்ரெண்டானது. இந்நிலையில் சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்கள் ஆர்வம்
இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர்.அப்பொழுது வெகு நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா அவர்கள் வந்தார். அவரை காண அவரின் காரை சுற்றி நின்று கொண்ட ரசிகர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் தவித்த ஆண்ட்ரியாவை காவலர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மேடைக்கு அழைத்து வந்தனர். பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர்.

ஆண்ட்ரியா கோபம்
அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ஊ சொல்றியா மாமா பாடலைப் பாடிய நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் அளவில்லாமல் ஆர்ப்பரித்தது. பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோபத்துடன் நின்ற அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாட சொல்வதாக கூற மற்றொரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடினார்.

லேசான தடியடி
அப்பொழுது ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி , நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications