தென்னை மர சின்னத்துக்கு ஓட்டு கேட்கும் எம்ஜிஆர், ஜெ.. அதிமுக நிலைமை எப்படி ஆகிப்போச்சு பாருங்க!
சேலம் : அதிமுகவினர் தென்னை மர சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நிகழ்வு சேலத்தில் அரங்கேறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் தென்னை மர சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை மோதலால், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவினர் புறக்கணித்தனர். சிலர் மட்டும் அதிமுக சின்னம் இன்றி சுயேசையாக போட்டியிடுகின்றனர்.
இதனால் அதிமுகவினர் சுயேச்சை சின்னங்களுக்கு வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பவர்கள் தற்போது தென்னை மர சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

உள்ளாட்சி இடைத் தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஒரே கட்டமாக ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தப் பதவிகளுக்கான தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.

கட்சி சின்னம் இல்லை
கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி ஆகிய இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலால் அதிமுகவில் வேட்பாளர் பட்டியலே அறிவிக்கப்படவில்லை.

சுயேட்சையாக
வேட்பு மனுத் தாக்கல் 27ஆம் தேதி 5 மணியோடு நிறைவடைந்த நிலையில், கடைசி வரை வேட்பாளர் பட்டியலே அதிமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்தந்தப் பகுதியினரே முடிவு செய்து ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தங்கள் கட்சி சார்பில் சிலரை களமிறக்கினர். அவர்களும், கட்சித் தலைமையின் அங்கீகார படிவம் இல்லாத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர், மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவினர் போட்டியிடவில்லை.

சேலம் ஒன்றியக் குழு
அந்தவகையில், சேலம் ஊராட்சி ஒன்றியக் குழு எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில், அவருக்கு தென்னை மர சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமணிந்த நபர்கள் தென்னை மர சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தென்னை மர சின்னம்
வழக்கமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் அதிமுகவினர் தென்னை மர சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததால் அப்பகுதி பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துச் சொல்லி இந்த முறை மட்டும் இரட்டை இலைக்குப் பதிலாக தென்னை மரச் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர்.

புலம்பும் ர.ரக்கள்
இரட்டை இலை சின்னம் அனைவரும் நன்கு அறிமுகமானது என்பதால் அந்த சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை எளிதாக கவர முடியும். ஆனால், இப்போது அதிமுக கட்சித் தொண்டர்களின் வாக்குகளைக் கூடப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலையைப் பாருங்கள் எனப் புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications