"இதோ இந்த வீடியோவை பாருங்க".. ரெக்கார்டிங்கை போட்டு காட்டி சீறிய எடப்பாடி.. திமுக மீது பரபர புகார்
சேலம்: சென்னையில் அதிக அளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன, சென்னையில் தோல்வி பயம் காரணமாக திமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர், என்று செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
நேற்று தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றியும், அடுத்த கட்ட மறைமுக தேர்தல்கள் பற்றியும் ஆலோசனை செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தனது பேட்டியில், கோவையில் தங்கி இருந்த வெளியூர் ஆட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாநகராட்சி ஆணையர், ஆட்சியரிடம் இதை பற்றி புகார் அளித்தோம். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கும்படி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் தேர்தல் நடந்தது.

சென்னை முறைகேடு
கோவை, சென்னை போன்ற மாநகராட்சிகளில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. முக்கியமாக சென்னையில்அதிக அளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் தோல்வி பயம் காரணமாக திமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர். அங்கு பல பூத்களில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. வாக்குசாவடிக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து திமுகவினர் இப்படிசெய்துள்ளனர்.

பூத்களில் கள்ள ஓட்டு
இங்கு பணியாற்றிய காவல் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. திமுகவினர் பணம் கொடுத்ததை காவல் துறையினர் தடுக்கவில்லை. சென்னையில் திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 114வது வார்டில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. பாருங்க (வீடியோவை எடுத்து காட்டுகிறார்). நாங்கள் மேல் இடத்தில் இருந்து வந்து இருக்கிறோம். ஏன் கள்ள ஓட்டு போட விடவில்லை.

பகிரங்மாக மிரட்டுகிறார்கள்
நாங்கள் போய் கள்ள ஓட்டு போடுகிறோம் என்று போலீசாரை திமுகவினர் பகிரங்மாக மிரட்டுகிறார்கள். வீடியோவை நீங்களே பாருங்கள். இதைத்தான் நாங்கள் ஆதாரமாக தெரிவிக்கிறோம். அதிகாரிகளை, நீங்கள் இங்கே இருக்க மாட்டீர்கள், டிரான்ஸ்பர் செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது பொது மக்களுக்கு தெரிய வேண்டும். அங்கு உள்ள 115வது வார்டிலும் இப்படி கள்ள ஓட்டு பதிவு செய்துள்ளனர். அங்கு வேட்பாளரின் கணவர் காவல்துறை அதிகாரியை மிரட்டி உள்ளனர்.

வீடியோ ஆதாரம்
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.இதனால் அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை, ரவுடி, குண்டர்களை வைத்து இப்படி செய்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லை
காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எடப்பாடியில் போலீஸ் அதிகாரி ஒருவரையே சிறை பிடித்தனர். தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளவில்லை. ராணுவத்தை களமிறக்கினால் மட்டுமே சரியாக இருக்கும். சட்ட ஒழுங்கு கொஞ்சம் கூட சரியில்லை, என்று செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications