எடப்பாடி: ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி - தீக்குளிப்போம் என மிரட்டிய திமுகவினர்
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 92 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்: எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

முடிவுகள் உடனுக்கு உடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அநேக இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 92 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் வளர்மதி வேலுவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் 92 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வளர்மதி வேல் அறிவிக்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள கதவை தட்டி உடைத்து கலாட்டா செய்தனர்.
இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாமல் சாலையில் அமர்ந்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறு வாக்கு எண்ணிக்கை செய்யாவிட்டால் தீக்குளித்து இங்கேயே இருந்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
திமுகவினரில் மிரட்டல் மறியல் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை அடுத்து போட்டியிட்ட திமுகவினர் ஓட்டு எண்ணும் மையத்தில் தாக்குதல் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் மறு எண்ணிக்கை கேட்டு தீக்குளிக்க முயற்சி ஈடுபட்டனர் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இதே போல மேட்டுப்பாளையம், பெள்ளாதி ஊராட்சி வார்டு உறுப்பினராக அதிமுக வேட்பாளர் 4 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செல்லாத ஓட்டுக்களை மீண்டும் சரிபார்க்க சொல்லி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு என்னும் மையத்திற்குள் செல்ல முயன்ற திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல் இறுதி சுற்று முடிவில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரப்பட்டி சுரேஷ் 1771 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications