’பொட்டச்சி’படத்தில் ஹீரோயினி நீதான்! இளம்பெண்களை வேல்சத்திரியன் வீழ்த்தியது எப்படி? பரபர வாக்குமூலம்
சேலம் : சேலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய போலி இயக்குனர் வேல் சத்திரியன் பெண்களை மயக்கியது எப்படி? எத்தனை பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் போலீசில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர், இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ. வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார்.

சேலத்தில் ஷாக்
அந்த அலுவலகத்தில் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு ரூ 30 ஆயிரம் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

டுபாக்கூர் டைரக்டர்
இந்நிலையில் கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அங்கு சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று ஜெயஜோதி, வேல் சத்ரியன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பணமும் மோசடி
மேலும் வேல் சத்ரியனின் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் பென்டிரைவ் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் பல பெண்களின் அரை நிர்வாண படங்கள் உள்ளிட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும் வேல் சத்ரியன் இளம் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றவுடன் பேசும் ஆடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 300-க்கும் மேற்பட்ட சினிமா ஆசையில் வந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு அவர்களிடம் தலா முப்பதாயிரம் ரூபாய் பாய் வரை பணத்தைப் பெற்று ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

புகார்கள் குவிகிறது
அடுத்தடுத்து வேல் சத்ரியன் மீது சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார்கள் குவிந்து வரும் நிலையில் வேல் சத்ரியனின் பெண் உதவியாளரான ஜெயஜோதியை மூன்று நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல அதிரவைக்கும் தகவல்களை ஜெயஜோதி கூறி இருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என வரும் பெண்களிடம் வேல் சத்திரியன் ஆபாசமாக வீடியோ எடுத்ததோடு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த வீடியோக்களை இரவு முழுவதும் அவர் பார்த்து ரசிப்பார் எனவும் ஒரு பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சூட்டிங் நடத்தியதோடு அந்தப் பெண்ணை பலாத்காரமும் செய்துள்ளார்.

ஒரே ரீல்
மேலும் தான் 'பொட்டச்சி' என்ற ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் அனைத்து பெண்களிடமும் இதே கதையை கூறி அவர்களை ஏமாற்றி பணம் பறித்ததோடு பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு வந்ததாக ஜெயஜோதி கூறியிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications