வார்னிங்..! மேட்டூர் அணை நீர்திறப்பு 1.05 லட்சம் கன அடியாக உயர்வு.. 12 மாவட்டங்களில் வெள்ள அபாயம்!
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக 83,500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப் பட்டு வருகிறது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 95 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

வெள்ள எச்சரிக்கை
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு
தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 83,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு
முன்னதாக, மேட்டூர் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று நேரில் ஆய்வு செய்தார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. மேலும், அதிகாரிடம், அணை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் கே.என்.நேரு, கரையோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications