சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண்டைக்கேறிய மதுபோதை! பள்ளிக்கூட வாசலிலேயே சுருண்டு விழுந்த மாணவன்! பெற்றோர்களே உஷார்!

Google Oneindia Tamil News

சேலம் : சேலம் அருகே பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே மது அருந்தி விட்டு மதுபோதையில் சாலையில் தள்ளாடி விழுவதும் அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா விற்பனை மற்றும் காலையிலேயே மதுபான விற்பனை அதிகரித்து வருவதாகவும் இதனால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக கஞ்சா மற்றும் மதுபோதைக்கு மாணவர்கள் அடிமையாவதோடு, அதற்காக குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே காவல்துறையினர் உடனடியாக கஞ்சா புழக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிபோதை பழசு.. இப்போ நடுங்க வைக்கிறது கஞ்சா.. போதையில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள் குடிபோதை பழசு.. இப்போ நடுங்க வைக்கிறது கஞ்சா.. போதையில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்

பள்ளி சீருடை

பள்ளி சீருடை

இந்நிலையில் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே மது அருந்தி விட்டு மதுபோதையில் சாலையில் தள்ளாடி விழுவதும் அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, செல்லப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

கஞ்சா போதை

கஞ்சா போதை

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே மது அருந்தி விட்டு மதுபோதையில் சாலையில் தள்ளாடி விழுவதும் அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையிலே பள்ளிக்கு செல்வதோடு ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

 வாசலில் மட்டை

வாசலில் மட்டை

இந்த நிலையில் மற்றொரு சம்பவமாக வாழப்பாடி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடி மட்டையாகி கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பெற்றோர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 பெற்றோர் கவனம்

பெற்றோர் கவனம்

தற்போதைய நிலையில் மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கரூரில் ஒயின் போதையில் பள்ளி மாணவிகள் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்ததும் காவல்துறையினர் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்கள் யார் யாருடன் பழகுகிறார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து பெற்றோரும் ஓரளவு கவனம் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் பாவம்

ஆசிரியர்கள் பாவம்


பெற்றோர்களால் ஒரு மாணவனை கண்காணிப்பதே சிரமமாக உள்ள நிலையில் 1200 மாணவர்களை கண்காணிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது. பள்ளிக்கு வெளியே கஞ்சா மது விற்பதை ஆசிரியர்களும் எப்படி தடுக்க முடியும். எனவே ஆசிரியர்கள் ஒழுக்கத்தை மட்டுமே சொல்லிக் கொடுக்க முடியும் ஆனால் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் மதுவிற்பனையை தடுக்க போலீசாரும் முன்வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Parents are shocked as a video of a student coming to school near Salem staggered on the road in a drunken state while in his school uniform and a fellow student took him to school safely has gone viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X