'ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல்' போயிருக்கு.. ஆக்சன் உறுதி.. அமைச்சர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சேலம்: கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சேலத்தில் பால்வளத் துறை அமைச்சர் எஸ். எம்.நாசர் பேட்டியின் போது கூறினார்.

வட்டம் ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் கூறுகையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி நியமன ஆணை உள்ளிட்டு பல்வேறு வகைகளில் ஊழல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தீபாவளி காலத்தில் அவருடைய இல்லத்திற்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து ஒன்றரை டன் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக அவர் எந்த பணமும் செலுத்தவில்லை அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலத்தில் பேட்டி

சேலத்தில் பேட்டி

சேலம் சித்தனூர் தளவாய் பட்டியில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 770 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி சராசரியாக 5 லட்சத்து 28 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருவதாகவும் uஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 59 தொகுப்பு பால் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தமிழக அரசு உத்தரவின்படி பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இதனால் கூடுதலாக தற்போது ஒரு லட்சத்து 86 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

235 பணியிடங்கள்

235 பணியிடங்கள்


கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 234 பணியிடங்கள் இளநிலை நிலையில் தவறான முறையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 460 பேர் மற்றும் அதிகாரிகள் நிலையில் 174 பேர் தவறான முறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக புரோக்கர்கள் உதவியுடன் இந்த பணி நியமனம் நடந்துள்ளது அவர்களுக்கு பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு புதிய அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

டேங்கர் லாரி

டேங்கர் லாரி


ஆவின் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பலர் ஆவினில் கொள்முதல் நிலையங்களில் பால் கொள்முதல் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களின் பாலை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். டேங்கர் லாரி வாடகை பிரச்சினை சரி செய்து ஆவின் பொருட்கள் சீராக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல்

சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு பால் வழங்க தமிழக முதல்வர் ஆலோசித்து வருகிறார் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிலையங்களில் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி இறந்த 48 பேரின் வாரிசுகளுக்கு வாரிசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார். இந்த பேட்டியின் போது தமிழக பால்வளத்துறை நிர்வாக மேலாளர் கந்தசாமி ஐஏஎஸ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஆவின் பொது மேலாளர் நிர்மலாதேவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+