Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டை அபகரிக்க முயன்றதாக பெண் புகார்.. சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: வீட்டை காலி செய்ய மறுப்பதுடன் அபகரிக்க திட்டமிடுவதாகவும், தன்னை மிரட்டி வருவதாகவும் ஆஷாகுமாரி என்பவர் அளித்த புகாரை ஏறறு சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்ஷை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானை பூர்வமாக கொண்டவர் பியூஸ் மானுஷ் வயது 48. சமூக ஆர்வலரான இவர், சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார். சேலம் குரல் கொடு, சேலம் மக்கள் குழு என்ற அமைப்களை நடத்தி வருகிறார்.

பியூஸ் மானுஸ் மீது அரசியல் கட்சிகளுக்கு எதிராக போராடிய விவாகரம், சுற்றுச்சூழலுக்காக போராடியது உள்பட பல்வேறு விவகாரங்களுக்காக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

ஐந்து வருடம் முன்பு

ஐந்து வருடம் முன்பு

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆஷா குமாரி, வயது 53. சேலத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனத மக்ள், மருமகனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பியூஸ் மானுஷ்க்கு எதிராக புகார் அளித்தார். அதன்பின்னர் அவர் கூறும் போது, சேலம், கோரிமேடு, கொண்டப்பநாயக்கன் பட்டியில் எங்கள் வீடு உள்ளது. ஐந்து வருடத்திற்கு முன்பு சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்க்கு எங்கள் வீட்டை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து விட்டோம். அதன்படி அவர் குடியேறினார். 11 மாதங்க்ளுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தை புதுபித்து வந்தோம்.

இடம் ஆக்கிரமிப்பு

இடம் ஆக்கிரமிப்பு

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் இறநதுவிட்டார். இதனால் சொந்த வீட்டில் குடியேறலாம் என்று முடிவு செய்தோம். பியூஸ் மானுஷிடம் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. ஆனால் அவர் வீட்டை காலி செய்ய மறுத்து மிரட்டுகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று மாதங்கள் வாடகை தராமல் இழுத்தடித்தார். வாடகை கேட்டு போன போது, அனுமதியின்றி கட்டம் கட்டி, முன்புறத்தில் உள்ள மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து ஷெட் அமைத்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். போலீஸ், முதல்வர் தனிப்பிரிவுக்கு எல்லாம் மனு போட்டேன்.

சிவில் பிரச்சனை

சிவில் பிரச்சனை

ஆனால் உதவி கமிஷ்னர் என்னை அழைத்து நிலுவை வாடகை தொகையை வசூலித்து கொடுத்துவிட்டு, இது சிவில் பிரச்சனை, தலையிட முடியாது என்று ஒதுக்கி கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் முதல் இப்போது வரை பியூஸ் மானுஷ் வாடகை தரவில்லை. வீட்டுக்கு சென்று காலி செய்யுமாறு கூறிய போது, வீட்டை காலி செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்" என்றார்.

முதல்வர் முகாமில் மனு

முதல்வர் முகாமில் மனு

இதனிடையே சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் ஆஷாகுமாரி புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. இந்த புகாரை அடுத்து காவல் துறை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனராம். இந்நிலையில் வீட்டை அபகரித்துக்கொண்ட காலி செய்ய மறுப்பதாக வழக்கு பதிவு செய்த சேலம் போலீசார் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்ஸை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+