அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை! தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி பேசிட்டாங்க - எடப்பாடி பழனிசாமி
சேலம் : அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை, நல்ல முறையில் உள்ளது எனவும், தொண்டர்களை உற்சாகப்படுத்த ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது உடைந்த பிறகு அவ்வப்போது சச்சரவுகள் மூத்த நிர்வாகிகளிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் வெளிப்படையாக பாஜக மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காத நிலையில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் அவ்வப்போது பாஜகவை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் அதிமுகவை அழித்துவிட்டு தான் பாஜக வளர வேண்டுமென்ற எண்ணம் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை நல்ல முறையில் உள்ளது எனவும், தொண்டர்களை உற்சாகப்படுத்த ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்..

முதலமைச்சர் ஸ்டாலின்
அப்போது பேசிய அவர்," ஜெயலலிதா இருக்கும் போதும் ஏராளமான திட்டங்கள் தந்தார். அவரது மறைவுக்கு பிறகும் ஏராளமான திட்டங்கள் தரப்பட்டுள்ளன. சமீபத்தில் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக எடப்பாடி தொகுதியில் எந்த திட்டமும் செய்யவில்லை என கூறி உள்ளார். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரிகள் நிரம்பும்படியான மேட்டூர் உபரிநீர் திட்டம் தந்து, அதிமுக ஆட்சியில் அதில் ஒரு பகுதி முடிக்கப்பட்டு விட்டது.

கடும் கண்டனம்
திமுக பொறுப்பேற்ற பின் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
பின்தங்கிய எடப்பாடி தொகுதிக்குள் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஜெயலலிதா இருக்கும்போது தரப்பட்டது. வேண்டும் என்றே என்மீது தவறான, பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியது கண்டிக்கத் தக்கது.

உறவில் விரிசல் இல்லை
மத்திய அரசு இரண்டுமுறை விலைகுறைப்பு செய்தபின்னும், திமுக தேர்தல் வாக்குறுதிபடி விலை குறைப்பு செய்யவில்லை. அதிமுக - பாஜக உறவில் விரிசல் இல்லை நல்ல முறையில் உள்ளது எனவும், தொண்டர்களை உற்சாகப்படுத்த ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதிலே அக்கறை உண்டு" என பேசினார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications