ஏற்காட்டில் அசைவ விருந்துடன் மது.. முதல் முறை குடித்த இளைஞர் பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்!
ஏற்காடு: புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சேலத்தை சேர்ந்த நபர் மது அருந்தி கொண்டிருந்தபோது மூச்சுத்திண்றல் ஏற்பட்டு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய சந்தோஷ் உள்பட அவரது நண்பர்கள் புத்தாண்டை வரவேற்க அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்களை வாங்கியுள்ளனர். நள்ளிரவு புத்தாண்டு தொடங்கியதும் அனைவரும் மது அருந்தியுள்ளனர். சந்தோஷும் மது அருந்தியுள்ளார்.
ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டு இருந்த போது திடீரென சந்தோஷிற்கு மூச்சுத்திண்றல் எற்பட்டுள்ளது. அதே இடத்தில் சந்தோஷ் மயங்கி விழுந்து இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

நண்பர்களுடன் ஏற்காட்டு சென்ற சந்தோஷ்
சேலம் மாவட்ட்டம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டியை சேர்ந்த அண்ணாமலையின் மகன் சந்தோஷ் (வயது 23). சந்தோஷ் இந்த ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாட திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தனது நண்பர்கள் 9 பேருடன் அவர் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மலைப்பகுதிகளைக் கொண்ட பிரபலமான சுற்றுலாத்தளமான ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்க்ள் விடுதியிலேயே புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தனர்.

மது அருந்திய சந்தோஷ்
நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்று கொண்டாட வேண்டும் என்றும் அதற்காக மது பாட்டில்கள் மற்றும் அசைவ உணவுகளை தங்கியிருந்த தனியார் விடுதியில் வாங்கி வைத்துள்ளனர். புத்தாண்டு பிறந்தததும் நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கிய இளைஞர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். சந்தோஷும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அசைவ உணவுகளையும் சாப்பிட்டுக்கொண்டே மதுவை அருந்தியுள்ளனர்.

திடீரென மூச்சுத்திணறல்
ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டு இருந்த போது சந்தோஷிற்கு திடீரென மூச்சுத்திண்றல் எற்பட்டுள்ளது. அதே இடத்தில் சந்தோஷ் மயங்கி விழுந்து இருக்கிறார். இதைப்பார்த்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நண்பர்கள் பதறி போகினர். உடனடியாக் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சந்தோஷை அழைத்து சென்றனர். சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

முதல் முறையாக மது குடித்ததாக
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷின் நண்பர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. சந்தோஷ் முதல் முறையாக மது குடித்ததாகவும் இதனால், உடல் ஒத்துழைக்காமல் ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்த சந்தோஷூக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

ஜாலி என்ற பெயரில்
புத்தாண்டு தினத்தை கொண்டாட சென்ற இடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் பலியானது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுப்பதகா அமைந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும் வாகனத்தில் அதிவேகமாக செல்வதும் போன்ற செயல்களில் சில இளைஞர்கள் ஈடுபடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஜாலி என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது ஒரு சில நேரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீர்குலைத்து விடுவது போல் அமைந்துவிடுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications