நீ ரொம்ப அழகா இருக்கே! இன்ஸ்டா காதல் வலையில் சீரழிந்த மாணவிகள்! ஆம்னிவேனுக்குள்ளே அத்துமீறிய 3 பேர்!
சிவகங்கை : இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிகளை நேரில் சந்திக்கலாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் கைகள் இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் கைகளில் செல்போன்கள் இல்லாமல் மாணவர்களையோ இளைஞர்களையோ காண முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.
ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது

இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தான் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிகளை நேரில் சந்திக்கலாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் காரைக்குடிஅருகே உள்ள அரியக்குடி பழனிச்சாமி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 19 வயது ஏசி மெக்கானிக் உடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். நாளடைவில் விக்னேஷ் அந்த 16 வயது மாணவிக்கு காதல் வலை விரித்து அவரை காரைக்குடிக்கு அழைத்துள்ளார்.

காதல் வலை
12 ஆம் வகுப்பு மாணவியும் அவரது தோழியான 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காரைக்குடி வந்துள்ளனர். அங்கு வந்த பின்பு விக்னேஷ் இரண்டு மாணவிகளையும் தனது ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டார் விக்னேஷ் அவனது நண்பனான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக் படிக்கும் கவியரசு வையும் மற்றொரு நண்பனான 16 வயது சிறுவனையும் வரைவழைத்து ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு மாணவிகளை அழைத்துக் கொண்டு சினிமா பார்க் என காரைக்குடி முழுவதும் சுற்றிவிட்டு இரவில் அரியக்குடி செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆம்னி வேனிலேயே மாணவிகளை அழைத்துச் சென்று மூவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஆம்னி வேனில் அத்துமீறல்
நர்சிங் கல்லூரி மாணவியின் தாயார் தனது மகள் வீடு திரும்பாதது கண்டு கல்லல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கல்லல் காவல்துறையினர் மாணவியின் செல் நம்பர் லொகேஷனை வைத்து மாணவி இருக்கும் இடம் வந்து பார்த்த பொழுது மாணவி இருவரையும் மூன்று பேரும் பாலியல் அத்துமீறல் செய்து ஆம்னி வேனிலேயே வீடு போல் அவர்களை தங்க வைத்துள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் வேணுடன் அழைத்து வந்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லல் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

அதிரடி கைது
அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணையில் இரு மாணவிகளையும் மூன்று பேரும் பாலியல் அத்துமீறல் செய்தது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து விக்னேஷ், கவியரசு ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த மகளிர் காவல் துறையினர் மைனர் மாணவனை சிறார் சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் இரு மாணவிகளின் வாழ்க்கை சீரழிந்தது
அவர்களது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் செல்போனிலேயே மூழ்கியிருக்கும் மாணவிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications