எந்த நேரத்திலும் கைதாகிறார் ராஜேந்திர பாலாஜி? 6 தனிப்படைகள் தீவிரம்! சிக்கிய சகோதரி மகன்கள், டிரைவர்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எந்த நேரத்திலும் ராஜேந்திரபாலாஜி கைதாக வாய்ப்புள்ளது.
சிவகாசி: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தலைமறைவான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜி எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு உள்ளது. பண மோசடி வழக்கில் தொடர்புடையதாக ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் இருவரும், கார் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது , ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும் ,அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், இதில் தனக்கு எந்த தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை எதிர்ப்பு
காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் அரசு வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . மேலும் விஜய்நல்லதம்பியையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தள்ளுபடி செய்த நீதிபதி
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். இதேபோல புகார்தாரர்கள் தரப்பிலும் ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார் அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

தேடுதல் வேட்டை
ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைத்து மொத்தம் 6 தனிப்படைகள் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது. சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

சகோதரி மகன்கள் கைது
இந்த நிலையில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதுங்கிய ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தேவைப்பாட்டால் ஒரு தனிப்படை பெங்களூர் செல்லும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் ராஜேந்திர பாலாஜி எந்தநேரமும் கைதாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications