வாழ வழியில்லையே! இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்த மூவர்! மொத்தம் அகதிகள் எவ்வளவு தெரியுமா?
ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக இன்று அதிகாலை 3 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். விசாரணைக்கு பிறகு மூவரும் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேக்களின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்ட துவங்கினர்.
இதற்கிடையே பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்த பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மக்கள் போராட்டம்
இதனால் விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதனால் இலங்கையின் நிலைமை மோசமானது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.

அதிபர் பதவியை விடாத கோத்தபய
இருப்பினும் அதிபர் பதவியை மட்டும் விட்டுக்கொடுக்காமல் கோத்தபய ராஜபக்சே உள்ளார். எக்காரணத்தை கொண்டும் அதிபர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறியுள்ள கோத்தபய ராஜபக்சே, சரிந்த இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

தமிழகம் வரும் மக்கள்
இருந்தாலும் கூட இலங்கையில் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் கடல் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர். இவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

மூவர் வருகை
அந்த வகையில் இலங்கை தலைநகர் கொழும்பை சேர்ந்த மூவர் அதிகாலை 4 மணியளவில் பெண், சிறுவர், இளைஞர் என மூவர் அகதிகளாக வந்தனர். 3 பேரும் படகில் தனுஷ்கோடிக்கு அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு வந்தனர். இவர்கள் 3 பேரிடமும் மரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அகதிகளாக பதிவு செய்யப்பட உள்ளனர்.

மொத்தம் 83 பேர் வருகை
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் 22 ம் தேதி முதல் அந்த நாட்டில் இருந்து மக்கள் தமிழகம் வர துவங்கினர். இதுவரை 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 3 பேர் வந்துள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications