தமிழக மீனவர்களின் 87 படகுகள் இன்று விடுதலை- இலங்கை அதிபரின் இந்திய வருகையால் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்களின் படகுகளை இன்று விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 87 படகுகளை இன்று விடுவிக்க இலங்கை அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகையையொட்டி, அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தமிழகப் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும், படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். சில மாதங்களுக்குப் பின்னர் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வருகிற 15 ஆம் தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி, இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவித்து உத்தரவிட்டது.
இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் உத்தரவின்படி, அரசின் உத்தரவு நகலை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், திரிகோணமலை, பருத்தித்துறை, மல்லாகம், மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் அதிகாரிகள் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்தப் படகுகளை நீதிமன்றங்கள் விடுவித்தவுடன், மத்திய அரசின் அனுமதியோடு அவற்றை பெற்றுக் கொள்ள தமிழக மீனவர்கள் அங்கு செல்வார்கள் என இந்திய, இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் தேவதாஸ் நேற்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications