For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை தமிழ் பகுதிகளில் சுயாட்சி மலர உதவ வேண்டும்: மோடிக்கு சிவாஜிலிங்கம் கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sri Lanka Tamil leader seeks Indian PM's intervention for a political solution
கொழும்பு: இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க உதவிட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது இலங்கை நடத்தும் ஒடுக்குமுறையை நிறுத்த உதவ வேண்டும் என்றும் அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''13வது சட்டத் திருத்தம் சமத்துவமான அரசியல் தீர்வுக்கு வழி வகுக்கும் என தமிழ் மக்கள் நம்பவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த உதவ வேண்டும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க உதவிட வேண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில அபகரிப்பு, ராணுவமயமாக்கல் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் மருத்துவர்களையும், ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்களையும் அனுப்பி எங்களுடைய மருத்துவ, கல்வித் தேவைக்காக உதவ வேண்டும்.

இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையேயான பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும்" என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Former Tamil National Alliance (TNA) MP and Northern Provincial Council (NPC) member M.K. Sivajilingam in a letter to Modi in his letter says the Tamil people in Sri Lanka cannot expect a solution from Sri Lankan governments without the intervention of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X