அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம்
யாழ்ப்பாணம்: அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு படிப்பினை என்று அந்நாட்டில் இருந்து தமிழ் பத்திரிகையான ஈழநாடு தமது தலையங்கத்தில் எழுதியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த மக்கள் கிளர்ச்சி குறித்த ஈழநாடு எழுதியுள்ள தலையங்கம்: சில ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்ற காட்சிகளை, இப்போது இலங்கைத் தீவில் காண்கின்றோம். நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் - நான்தான் நீங்கள் தேடிய தலைவன் என்று எக்காளமிட்ட கோட்டபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.

இந்த தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி மாளிகையின் படுக்கையறை, நீச்சல் தடாகம் ஆகியவற்றை போராட்டக்
காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் புகைப்பட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழிகள் மற்றும் அங்குள்ள வசதி களை சிங்கள மக்களுக்கு காட்சிப்படுத்தி, தங்களின் அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள முற்பட்டவர்கள், இப்போது ஆர்பாட்டக்காரர்களுக்கு அஞ்சி,மறைந்து ஓடும் காட்சிகளை அதே சிங்கள மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் போது, தங்களது அதிகாரத்தின் எல்லைகள் தெரியாமல் மமதை கொள்பவர்கள் பலரது நிலைமை இப்படித்தான் முடிந்திருக்கின்றது. அது இப்போது ராஜபக்ஷக்களுக்கும் நடந்திருக்கின்றது. நாட்டை முன்நோக்கி வழிநடத்துவதற்கான எந்தவொரு உருப்படி
யான திட்டங்களையும் கொண்டிருக்காமல், வெறுமனே, சிங்கள இனவாதத்தின் மூலம் நீண்ட காலத்திற்கு ஆட்சியிலிருப்பதற்கான கனவையே ராஜபக்ஷக்கள் கொண்டிருந்தனர்.
மகிந்த விதைத்த இனவாதத்தை, கோட்டபாய ராஜபக்ஷ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்டார். ஆனால் அடிப்படையில் மகிந்த எதைச் செய்தாரோ அதனையே கோட்டபாய ராஜபக்சவும் செய்தார். நாட்டின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டத்தில், 70 விகித்திற்கு மேற்பட்ட தொகையை அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரதிநித்துவம் செய்த அமைச்சுக்களும், அரச நிறுவனங்களாலுமே கட்டுப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த சிறிலங்காவே, ராஜபக்ஷ குடும்பத்தினுடையது போன்றே காட்சியளித்தது. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள், மறுபுறமாக, அரசர்கள் போன்றே செயற்பட்டனர். இதன் விளைவாக, ஆதரித்த மக்களே, இப்போது வெறுத்து துரத்துகின்றனர்.
ஜனநாயக அரசியல் என்பது மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் ஓர் அரசியலாகும். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் ஏனைய இனங்கள்
தொடர்பிலிருக்கும் அச்சங்களை, ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தங்களின் அதிகார பசியை போக்குவதற்காக பயன்படுத்திக் கொண்டனர்.
ராஜபக்ஷக்கள் இதனை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் எல்லாக் காலத்திலும் தங்களது அரசியல் சீவியத்தை தக்கவைக்க
முடியுமென்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது.
கோட்டபாய ராஜபக்ஷ 69 லட்சம் மக்களின் ஆதரவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து,சிங்கள பௌத்தத்தின் காவலனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டால், தொடர்ந்தும் ஆடசியிருக்கலாம் என்பதே கோட்டபாயவின் அரசியல் கணக்காக இருந்தது. இப்போது அவமானகரமான தோல்வியை சந்தித் திருக்கின்றார். இதில் ரணில் விக்கிரமசிங்கவும் தோல்வியடைந்திருக்கின்றார். ஆனால் ஓர் ஆசனத்தில் பிரதமரானவர் என்னும் வகை யில் அவரை பொறுத்தவரையில் இது பெரிய தோல்வியல்ல. ஏனெனில் அவர் ஏற்கனவே தோல்விடைந்திருந்த ஒருவர்தான்.
அதிகார மமதையில் தலை கால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இது ஒரு படிப்பினை. அதே வேளை, மக்கள் எழுச்சி கொண்டால், அதிகாரத்திலிருப்பவர்கள் அடங்கித்தானாக வேண்டும் என்பதற்கும் இது ஒரு நல்ல உதாரணமாகும். ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து ராஜபக்ஷ சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ராஜபக்ஷக்கள் தந்திரங்கள் செய்யும் காலமும் முடிந்துவிட்டது. இனி எத்தகைய தந்திரங்கள் செய்தாலும் பயனில்லை. அதே வேளை, மக்களதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் உத்வேகம் பெற்றிருக்கின்றனர். இது குறிப்பிட்டகாலத்திற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையுணர்வை கொடுத்துக் கொண்டிருக்கலாம். இவ்வாறு ஈழநாடு தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications