பிளாஸ்டிக் பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு! நொறுக்கி தள்ளும் சூப்பர்வார்ம்கள்.. அசத்தல் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி: பிளாஸ்டிக் பஞ்சாயத்துகளுக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டும் வகையில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழுங்காக நிர்வகிப்பது தான் பெரும் பிரச்சினையாக இப்போது உருவெடுத்துள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் கூட இந்த பிளாஸ்டிக் ஊடுருவி விடுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளால் நமக்கு மட்டுமில்லை.. சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் உலகெங்கும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 சூப்பர் வார்ம்

சூப்பர் வார்ம்

இந்தச் சூழலில் தான் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் சூப்பர் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சூப்பர் வார்ம் என்று அழைக்கப்படும் ஜோபோபாஸ் மோரியோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை சூப்பர் வார்ம்கள் பாலிஸ்டிரீன் எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உணவாக உண்டு உயிர்வாழ முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 மினி மறுசுழற்சி ஆலைகள்

மினி மறுசுழற்சி ஆலைகள்

வண்டு லார்வாக்கள் குடல் என்சைம் மூலம் பிளாஸ்டிக்கை ஜீரணிக்கின்றன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது பிளாஸ்டிக் மறுசுழற்சியில் மாபெரும் கண்டுபிடிப்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து டாக்டர் கிறிஸ் ரிங்கே கூறுகையில், "சூப்பர் வார்ம்கள் மினி மறுசுழற்சி ஆலைகள் போலச் செயல்படக் கூடியவை. பாலிஸ்டிரீனை வாயால் துண்டாக்கி, பின்னர் அதை தங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றன" என்று அவர் தெரிவித்தார். குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகக் குழு மூன்று சூப்பர்வார்ம் குழுக்களுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு வெவ்வேறு உணவுகளை அளித்தது.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

அதில் பாலிஸ்டிரீனை சாப்பிட்டு சூப்பர்லார்ம்களின் எடையும் கூட அதிகரித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூப்பர் வார்மின் குடலில் உள்ள பல நொதிகள் பாலிஸ்டிரீன் மற்றும் ஸ்டைரீனை சிதைக்கும் திறனைக் கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இன்சுலேஷன் மற்றும் கார் பாகங்கள் கூட இவை செறிக்கின்றன. இதுபோன்ற சூப்பர் வார்ம்கள் மறுசுழற்சி ஆலைகளை விட அதிக அளவு மறுசுழற்சி செய்யும் வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதில் எந்த நொதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கண்டறிய ஆய்வாளர்களுக்கு இது உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

 எப்படி பயன்படும்

எப்படி பயன்படும்

இதைச் சரியாகக் கண்டறிந்தால், அந்த நொதியை அதிகம் உற்பத்தி செய்து எளிதாகப் பெரிய மறுசுழற்சி செய்ய முடியும் என்பது ஆய்வாளர்கள் நம்பிக்கை. இது மட்டும் வெற்றிகரமாக முடிந்தால், பிளாஸ்டிக்கை துகள்களாகத் துண்டாக்கப்பட்டு, அதன் பின்னர் அதில் நொதி சேர்க்கப்படும். இதன் மூலம் எளிதாக பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

இதன் மூலம் பயோபிளாஸ்டிக்ஸ் போன்ற கவலைகளை உருவாக்கவும் பயன்படும் என நம்பப்படுகிறது. இதற்கு முன்னதாகவே கூட சில ஆய்வுகளில் சூப்பர்வார்ம்கள் பாலிஸ்டிரீனை உட்கொள்ளும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு அதைத் தாண்டி ஒரு படி மேலே செல்கிறது. அதாவது இந்த ஆய்வில் சூப்பர் வார்ம்களின் குடலில் இருக்கும் எந்த பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை அழிக்கப் பயன்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

 வணிக ரீதியாக

வணிக ரீதியாக

மறுசுழற்சி குறித்த ஆய்வுகளில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல சர்வதேச அளவில், பிளாஸ்டிக்கை உடைக்க பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பயன்படுத்துவதிலும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக மறுசுழற்சி செய்வது சாத்தியமா என்பதில் கேள்வியே இருக்கிறது.

 சவால்

சவால்

இது குறித்து பேராசிரியர் ஜாக்சன் கூறுகையில், "இதுபோன்ற ஆராய்ச்சிகளைப் பெரியளவில் முன்னெடுப்பது என்பது பெரிய சவால் தான். பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பது பெரும் சிக்கலாக உள்ள நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் அதிக கவனம் பெறுகிறது. அதேநேரம் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதைக் காட்டிலும் புதிய பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யக் குறைந்த செலவாகும் என்பதால் அதைச் செய்யவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். எனவே, பிளாஸ்டிக் மறுசுழற்சியில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+