• search
சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக.. மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு!

|

சிட்னி: முழுசும் நிர்வாண படங்கள்தான்.. அத்தனையையும் விற்று.. பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார் மாடல் அழகி ஒருவர்.. இவரது செயலுக்கு நாட்டு மக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேல்ஸ் பகுதிகள், விக்டோரியா கடற்கரை ஒட்டிய பகுதி.. என இங்கெல்லாம் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழ்நதுள்ளன. 25 மனித உயிர்கள் இரையாகி உள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகி உள்ளன.

young woman sold nudes to raise rs 5 crore for australian bushfire

இந்த வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் விலங்குகளையும் இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படக் காட்சிகள் மனதை பிசைவதாக உள்ளன. மற்றொரு பக்கம் காட்டு தீயை அணைக்க, அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதனிடையே நல்லுள்ளங்கள் பல தங்கள் உதவிகளை செய்ய தானாக முன்வந்து கொண்டிருக்கின்றன!

அந்த வகையில் அமெரிக்க பெண் ஒருவரும் முன்வந்துள்ளார். இவர் ஒரு மாடல் அழகி. பெயர் கெய்லன் வார்ட். பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு பணம் திரட்டுவதற்காக தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மாடலான இவர், தனது எக்ஸ்-ரேடட் போட்டோக்களை இப்படி விற்க ஆரம்பித்திருக்கிறார்.. இதுவரைக்கும் 100,000 டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டி விட்டாராம்.

மேலும் செஞ்சிலுவை, சால்வேஷன் ஆர்மி போன்ற தொண்டு நிறுவனங்களை, தீயணைப்பு சேவைகளின் பட்டியலை இணைத்து, இன்னும் சில டாலர்களை திரட்ட முடியும் என்றும் நம்பிக்கையாக சொல்கிறார். இதில் அதிகபட்சமாக ஒருவர் 5000 டாலர்களை நன்கொடையாகவும் தந்திருக்கிறார்.

இப்படி நிதியை திரட்ட வேண்டுமா என்று குடும்பத்தில் இவருக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. ஆனாலும் மாடல் அழகி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. அது மட்டுமல், "பேரழிவு தரும் இந்த காட்சிகளை எல்லாம் பார்த்தால், சாதாரண மனுஷனுக்கும் கவலை வரும்.. கண்டிப்பாக உதவி செய்ய முன்வருவான்" என்று விளக்கமும் தருகிறார்.

கெய்லன் வார்ட்டின் இந்த காரியத்தை சோஷியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகின்றனர்.. இன்ஸ்டாகிராமில் 765, ட்விட்டரில் 30,000 என இவரது ஃபாலோயர்ஸ்களின் ஊக்கமும் இவரது செயலுக்கு உத்வேகத்தை தந்து வருகிறது.. உதவி என்று வந்துவிட்டால் எப்படி வந்தால் என்ன.. அங்கு ஈரமனசு தவிர வேறு எதற்குமே இடமிருக்காது என்பதைதான் இந்த அழகி நிரூபித்து வருகிறார்!

இதற்கிடையே, இவரது படங்கள் ஆபாசமாக இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் இவரது கணக்கை நீக்கி விட்டது. இவரது குடும்பத்தினரும் கூட இவரை ஒதுக்கி வைத்து விட்டனராம். அதேபோல இவரது காதலரும் கூட ஒதுங்கி விட்டாராம். ஆனாலும் என்ன என்னால் பல கரடிகளை காட்டுத் தீயிலிருந்து காப்பாற்ற முடிந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் இந்த அழகி.

English summary
american model woman sold nudes to raise rs 5 crore for australiam bushfire and instagram deletes her account
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X