தரைமட்டமாகிறது பொறியியல் மவுசு.. மாணவர்கள் இல்லாததால் 11 கல்லூரிகள் இழுத்து மூடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் சேராததால் 11 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல பெருகிவிட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் படித்து வெளியேறுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பில் நுணுக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பது தெரியாது.

கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம்

கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம்

நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் கலை, அறிவியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பி காம், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல் உள்ளிட்ட படிப்புகளை தேடி படிக்கின்றனர்.

பொறியியல் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் படுமோசமாக இருந்தது. அந்த கல்லூரிகளின் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் சேர்க்கை

மாணவர்கள் சேர்க்கை

கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பெரும்பாலும் அரசு கல்லூரிகளையே தேர்வு செய்து படிக்கின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்தான் தனியார் கல்லூரிகளில் அதிகம் பணம் செலவு செய்து படிக்கின்றனர்.

அடிப்படை வசதியில்லை

அடிப்படை வசதியில்லை

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் இவற்றில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அடிப்படை வசதியில்லை. இவற்றில் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை அறிவோ இன்றிதான் இருக்கின்றனர். இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானமில்லை

வருமானமில்லை

இதனிடையே மாணவர்கள் சேராததால் வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தாங்கள் நடத்தி வந்த கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில் கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பின.

11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

சென்னையில் மேக்னா பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்பாள் கட்டட வடிவமைப்பு கல்லூரி மூடப்படுகின்றன. கோவையில் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி, சசி பிஸினஸ் ஸ்கூல் மூடப்படுகின்றன. மேலும் மகாராஜா பிரித்வி பொறியியல் கல்லூரியும் மூடப்படுகின்றன.

மதுரை, திருச்சி, நெல்லை

மதுரை, திருச்சி, நெல்லை

திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி, ஆர்.வி.எஸ்- கே.வி.கே நிர்வாக கல்லூரி, திருச்சியில் சுவாமி விவேகானந்தா நிர்வாகவியல் கல்லூரியும் மூடப்படுகிறது. மதுரை சி.ஆர் பொறியியல் கல்லூரி, மைக்கேல் மேலாண்மை கல்லூரி மூடப்படுகிறது. நெல்லையில் ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரியும் மூடப்படுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

5 மருத்துவக்கல்லூரிகளுக்கு தடை

5 மருத்துவக்கல்லூரிகளுக்கு தடை

தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இரண்டு ஆண்டுகள் செயல்படுவதற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Engineering colleges from the state of Tamil Nadu have applied to AICTE for closing down. As 11 of these colleges have applied for the grant of extension from Anna University itself, it is certain that 11 engineering colleges will be closed during the 1st Phase.
Please Wait while comments are loading...