குரங்கணி மீட்புப் பணியில் 16 கருடா படை வீரர்கள், 4 விமானங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி மீட்பு பணியில் 16 கருடா படை மற்றும் இந்திய விமான படை- வீடியோ

  தேனி : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கருடா காமாண்டோ படை வீரர்கள் 16 பேர் மற்றும் 4 இந்திய விமானப்படை விமானங்கள் இறங்கியுள்ளன.

  தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் நேற்று 40 பேர் சிக்கினர். சென்னையை சேர்ந்த ஒரு குழுவும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு குழுவும் குரங்கணி பகுதியில் மலையேற்றத்திற்காக சென்றுள்ளனர்.

  16 commandos of Garud Commando Force and 4 choppers from the Indian Air Force in rescue operation

  நேற்று மலையில் இருந்து கீழே இறங்கும் போது திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அஞ்சி சிதறியோடியுள்ளனர் மலையேற்றம் சென்றவர்கள். காட்டின் மேல்பகுதியில் எந்த தொலைதொடர்பு சாதனமும் இல்லாத நிலையில் கைடு ஒருவர் கீழே வந்து ஊர் மக்களை அழைத்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.

  இதனால் இரவு நேரத்தில் தான் தீ விபத்து செய்தி கிடைத்ததால் மீட்புப் பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீட்புப் பணிக்காக வந்த இந்திய விமானப்படையின் விமானமும் வெளிச்சம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டது.

  இந்நிலையில் இன்று காலை முதல் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இது வரை 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீட்புப் பணியில் கருடா கமாண்டோ படை வீரர்கள் 16 பேர் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று இந்திய விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும் நேரடியாக சுற்றுலா சென்றவர்கள் இடத்திற்கு சென்றடைய முடியாத நிலையில் மலையடிவாரம் சென்று அங்கிருந்து வீரர்கள் நடைபாதையாக 4 மணி நேரம் பயணித்து அதன் பிறகே தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு அதன் பின்னர் அவர்களை மீண்டும் ஹெலிகாப்டருக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kurangani forest fire : 16 commandos of Garud Commando Force and 4 choppers from the Indian Air Force, Operation underway 15 people have been rescued so far.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற