18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. நீதிமன்றம் இப்படியும் தீர்ப்பு வழங்கலாம்

சென்னை: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஹைகோர்ட் எந்த மாதிரியான தீர்ப்புகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது.

இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேர் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு மதியம் 1 மணிக்கு தீர்ப்பை அறிவிக்க உள்ளது.
தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றோ அல்லது செல்லாது என்றோ கூறப்பட வாய்ப்பு இருப்பதை போலவே மேலும் சில வாய்ப்புகளும் உள்ளன.
- 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினால், 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கலாம்
- அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைக்கலாம்
- சபாநாயகர் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்யலாம் என கேட்டுக்கொள்ளலாம்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!