For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி ஞாயிறுகளில் 19 பயணிகள் ரயில்கள் ஓடாது

Google Oneindia Tamil News

நெல்லை: பாதை பராமறிப்பு பணி காரணமாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-தூத்துக்குடி உள்பட 19 ரயில்கள் சனி, ஞாயிறுகளில் ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

Rail

மதுரை கோட்ட ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக தண்டவளங்கள், பாலங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பயணிகள் ரயில்கள் 2 மாதங்களுக்கு (டிசம்பர் 7ம் தேதியிலிருந்து மார்ச் 9ம் தேதி வரை) தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் வருமாறு,

திருச்சி-காரைக்குடி பயணிகள் ரயில் (வண்டி எண் 76831) சனிக்கிழமைகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

ஞாயிற்று கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள் விபரம்:

திருச்சி-திண்டுக்கல் (வண்டி எண் 56703), திண்டுக்கல்-திருச்சி (வண்டி எண் 56704), திண்டுக்கல்-மதுரை (வண்டி எண் 56707), மதுரை-திண்டுக்கல் (வண்டி எண் 56708), திண்டுகல்-பழனி (வண்டி எண் 56774), திருச்சி-மானமதுரை (வண்டி எண் 76807), மானமதுரை-திருச்சி (வண்டி எண் 76808) ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல செங்கோட்டை-நெல்லை (வண்டி எண் 56798), நெல்லை-செங்கோட்டை (வண்டி எண் 56799), நெல்லை-தூத்துக்குடி (வண்டி எண் 56828), தூத்துக்குடி-நெல்லை (வண்டி எண் 56827), நெல்லை-திருச்செந்தூர் (வண்டி எண் 56763), திருச்செந்தூர்-நெல்லை (வண்டி எண் 56766) நெல்லை-செங்கோட்டை (வண்டி எண் 56802) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
19 passangers Trains rescheduled, cancelled due to track work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X