
சென்னை: ஷங்கரின் 2.0 திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்று 5-ஆவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். வட சென்னை, மத்திய சென்னை ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் அவர் பேசுகையில், தமிழ் கற்றுக்கொள் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடுவாய் என்று பாலச்சந்தர் என்னை உருவாக்கினார்.

ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பி தான் இயக்குனர்கள் என்னை உருவாக்கினார்கள். 2.0 மாதிரி இனி ஒரு படம் வருமா என்பது போல இந்தப் படம் இருக்கும். இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும்.
காலாவில் வித்தியாசமான ரஜினியை ரஞ்சித் அறிமுகம் செய்துள்ளார். 2.0, காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் என்ன நினைக்கிறானோ பார்ப்போம்.
போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு தான்.
கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது. கனவு காணுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கனவு காணவேண்டாம் என கூறவில்லை. நேர்மையான முறையில் லட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும் - ரஜினிகாந்த் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!