காணும் இடமெங்கும் வெள்ளநீர்... 2015 நவம்பர் இரவு மீண்டும் கண்முன் வருதே! #chennaifloodtrap

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விடாமல் கொட்டி வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் ஆறுகளாக மாறி ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அலுவலகம் முடிந்து வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியும், டிசம்பர் 1ஆம் தேதியும் இதுபோல ஒரு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர் சென்னை வாசிகள்.

வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நடந்தே சென்றனர் அதே போல நிலை நவம்பர் 1ஆம் தேதியன்று இரவில் ஏற்பட்டுள்ளது. வீடு திரும்ப முடியாமல் தவித்து வரும் பலரும் தங்களின் தவிப்பை ஃபேஸ்புக், ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர்.

வெள்ளத்தில் தவிக்கும் மேற்கு மாம்பலம்

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

குப்புற விழுந்து ஓடினேன்

குப்புற விழுந்து ஓடினேன்

ஓடினேன் ஓடினேனு நங்கநல்லூரில் இருந்து யூ டர்ன் அடிச்சு, குரோம்பேட்டை மழைல குப்புற விழுந்து, ட்ரிப்ளிகேன் குண்டு குழி வழியா நான் கேளம்பாக்கமே வந்து சேர்ந்துட்டேன் மூணு வருஷ மழைல..ஆட்சியாள பெருமக்களே, ஆனா நீங்க மூணு வருஷ மழைக்கப்புறம் அப்படியே இருக்கீங்க பாருங்க...நல்லாவே இருங்கடா

ஞாபகம் வருதே

தி.நகரில் காரில் சென்று கொண்டே படம் பிடித்துள்ள இவர், 2015ஆம் ஆண்டு மழையை நினைவு படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

வாட்டர் டேங்க் ரோடு

இது 2015ல் எடுக்கப்பட்ட படம். இப்போதும் கூட இது பொருத்தமாகத்தான் உள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

சாரை சாலையாக வாகனங்கள்

வெள்ளநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் சாந்தோம் முடங்கியுள்ளது என்பதை வாகனத்தில் சென்ற ஒருவர் படம் பிடித்து பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 2015 flood like situation has revisited Chennai and people are much worried over the situation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற