தென்காசி அருகே மாட்டு வியாபாரி வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி: கேரளா மாட்டு வியாபாரியிடம் இருந்து ரூ. 3.80 லட்சம் ரூபாய் பணத்தை தென்காசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தி முறையாக கணக்கு இல்லாமல் கொண்டுவரப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதுவரை 15 கோடிரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்காசி சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பறக்கும்படை தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். இலஞ்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியே கேரளாநோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கொல்லத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி நிஜாமுதீன் என்பவர் இருந்தார்.

அவரிடம் சோதனை செய்தபோது ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்கு நிஜாமுதீனிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பணத்தை அதிகாரிகள் குழுவினர் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் இந்த பணம் தென்காசி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications