கொண்டைக்குள் தங்கக் கட்டி கடத்தி வந்த மைதிலி... ஜட்டிக்குள் தங்கம் கடத்தி வந்த கொண்டையா!
சென்னை: தனது கொண்டைக்குள் 300 கிராம் மதிப்புள்ள 3 தங்கக் கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்த 35 வயது பெண்ணையும், அதேபோல ஜட்டிக்குள் 200 கிராம் கொண்ட தங்க பிஸ்கட்களை மறைத்து வந்த கொண்டையா என்ற ஆணையும் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விதம் விதமான முறையில் தங்கம் கடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த இருவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
குவைத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர மாநிலம் கரீம்நகரை சேர்ந்த கொண்டையா (31) என்பவர் சுற்றுலா பயணியாக குவைத் சென்று வந்திருந்தார்.
அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் சிக்கவில்லை. கொண்டையாவை தனியறைக்கு கொண்டு சென்று, சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் தலா 200 கிராம் கொண்ட 2, 100 கிராம் கொண்ட தங்க பிஸ்கட்டுகளை ஜட்டிக்குள் பதுக்கி வைத்திருந்தார். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல அதே விமானத்தில் பயணித்த 35 வயதான மைதிலி. இவரும் கரீம் நகரைச் சேர்ந்தவர்தான். இவர் மீ்தும் சந்தேகம் வந்தது. காரணம் இவரது தலையில் இருந்த கொண்டை வழக்கத்தை விட வித்தியாசமாக காணப்பட்டது.
இதையடுத்து இவரை தனியறைக்குக் கொண்டு போய் பெண் ஊழியர்கள் மூலம் கொண்டையை சோதனையிட்டனர். கொண்டையை அவிழ்த்து பார்த்தபோது தலைமுடிக்குள் இவர் 3 தங்கக் கட்டிகளை புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இருவரையும் போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications