ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவரை தாக்கியவர் கைது- முடிவுக்கு வந்தது போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயமடைந்த நெல்லை மாணவன் விஜய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி பயிற்சி மருத்துவரை தாக்கிய விஜய்யின் உறவினரை போலீஸார் கைது செய்தனர். இதன்னைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

A relative of patient who attacked Doctor has arrested

விஜய்க்கு முறையாக சிகிச்சை தரவில்லை என கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மருத்துவர்களை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மருத்துவரை தாக்கிய உறவினரை போலீஸார் 3 மணிநேரத்துக்கு பிறகு கைது செய்தனர். இதனால மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A relative of patient who attacked Chennai Rajiv Gandhi Govt Hospital Doctor was arrested.
Please Wait while comments are loading...