டெங்குவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அமைச்சர் உதயகுமார் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்குவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபமெடுத்துள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Action is being taken on wartime to eradicate dengue: Minister Udhayakumar

இந்நிலையில் டெங்குவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை முழு வீச்சில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் உதயக்குமார் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Uthayakumar said that action is being taken on wartime to eradicate dengue. He said people no need to worry about dengue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற