மின்சாரத்தை தயாரிக்கும் தொழில்நுட்பம்... தமிழகத்துக்கு கொண்டு வர அமெரிக்காவில் கமல் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நமக்கு நாமே மின்சாரத்தை தயாரிக்கு்ம தொழில்நுட்பத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து அமெரிக்காவில் கமல் ஆலோசனை நடத்தினார்.

பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கட்சியை தொடங்குவதாக கமல் அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Actor Kamal Hassan meets American Tamilan who invents power supply to generate

இந்நிலையில் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க தமிழர்களை கமல் சந்தித்து வருகிறார். அச்சமயம் கலிபோர்னியாவில் சன்னிவேல் மாகாணத்தில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கே.ஆர். ஸ்ரீதரை சந்தித்தார்.

தமிழரான ஸ்ரீதர் மாற்று சக்தி பேட்டரிகள் தயாரித்து உலக அளவில் பிரபலமடைந்தவர். அவரிடம் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய மாற்று சக்தி திட்டங்கள் குறித்து கமல் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தமிழகத்தில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காக சாத்தியகூறுகள் குறித்தும் அவர் பேசினார். தமிழகம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை தம்மால் கணிக்க முடிகிறது என்று கமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal hassan meets American Tamilan who invents power supply to generate on his own.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற