மக்கள் பாதுகாப்பாக இருக்கவே மருத்துவ முகாம் தொடக்கம்- கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமல் பிறந்த நாள்! முக்கிய அறிவிப்பு விரைவில்...வீடியோ

  சென்னை: மழை காலத்தில் மிக அவசியமாக மக்களை பாதுகாக்க மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பேசிய அவர் கூறியுள்ளார்.

  நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு பதிலாக கால்வாய்களை வெட்டுங்கள் என்று கடந்த 5 ஆம் தேதி கூறியிருந்தார் கமல்ஹாசன்.

  Actor Kamal launch Medical camp at Aavadi

  இந்த நிலையில் இன்று ஆவடியில் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை கமல் தொடக்கி வைத்தார்.

  தொடக்க விழாவில் பேசிய கமல், மழை காலத்தில் மருத்துவ முகாம் மிகவும் அவசியம் என்று பேசினார். மக்களை தொற்று நோய்களில் இருந்து காப்பதற்காகவே இந்த மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது அத்தியவசியமான ஒன்று என்றும் கூறினார். தங்களின் நற்பணி இயக்கத்தினர் முன் அனுபவம் மிக்கவர்கள் என்றும் கமல் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamal hassan has opened Medical camp at Aavadi in Chennai on his 63th birthday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற