தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் குதிக்கிறார் கமல்! #kh

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Kamal Speech about his political move-Oneindia Tamil

  சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : நல்லது செய்யும் போது ஜாக்கிரதையாக பண்போடு செய்ய வேண்டும். தப்பான ஆளிடம் தானம் கொடுப்பதும் தவறு தான் என்பதால் செயலி அறிமுகம்.

   Actor Kamalhaasan says that he is going all around Tamilnadu to meet the peoples needs

  தற்போது நான் வெளியிட இருப்பது வெறும் செயலி மட்டும் அல்ல, இது ஒரு பொதுஅரங்கம். 30 ஆண்டுக்கு முன்பு நற்பணி மன்றத்தினர் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது தேடித்தீர்ப்போம் வா என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தேன். அது போல தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் எளிமையான முயற்சி தான் அரசியல்.

  நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எனது கனவு. அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அரசியல் என்பது அனைத்தையும் தெரிந்து கொண்டு செய்ய வேண்டியது, எனவே அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது. அரசியல் கட்சி குறித்து என்னிடம் கேட்கிறார்கள், இதற்கு நான் சொல்லும் பதில் நான் இப்போது தான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்குள் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது.

  அரசியல் கட்சி குறித்து பலருடன் கலந்துஆலோசித்து வருகிறேன். பிள்ளை ஆணா, பெண்ணா என்று தெரியாமல் பெயர் வைக்க முடியாது. என்ன குழந்தை என்று தெரிந்தால் தான் அதற்கேற்ப பெயர் வைத்து அதனை அழைக்கும் போது அழகாக இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamalhaasan says that he has decided to go all around Tamil Nadu and will get the ideas of what people need and also introduced his new app #kh in Chennai today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற