For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் நமக்குத் தேவையா.. நடிகர் பார்த்திபன் அதிரடி!

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் நமக்கு தேவையா என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். மறுதேர்தல்தான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் அணியா சசிகலா அணியா என்ற அரசியல் குழப்பத்தில் தமிழகம் இருக்கும் இந்த சூழ்நிலையில் மறுதேர்தல் ஒன்றே மக்கள் அதிருப்திக்கு மருந்து என்று சொல்கிறார் நடிகர் பார்த்திபன்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் எழுந்துள்ள நிலையற்ற தன்மை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசு பலத்தை நிரூபிக்குமா அல்லது தோற்குமா என்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், இதெல்லாம் வேண்டாம் மக்களின் அதிருப்தியை போக்க மறுதேர்தல் ஒன்றே தீர்வு என்கிறார் நடிகர் பார்த்திபன். இதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது:

சின்ன கோடு பெரிய கோடு

சின்ன கோடு பெரிய கோடு

104 சாட்லைட் உள்ளடக்கிய ஏவுகனை விண்ணில் ஏவிய சாதனையை மறைக்கும் விதத்தில் இன்று அரசியல் சூழல் இருக்கிறது. நான் கட்சி சார்பில் எப்போதும் பேசுவதில்லை. பொதுமக்களின் மனநிலையில் இருந்து மட்டுமே பேசுகிறேன். ஒரு கோட்டை சின்னதாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் பெரிய கோடு போட வேண்டும்.

குற்றவாளி கை காட்டிய முதல்வர்

குற்றவாளி கை காட்டிய முதல்வர்

மறைந்த ஜெயலலிதாவும் ஒரு குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படி என்றால் ஒரு குற்றவாளி கை காட்டியவர் எப்படி முதல்வராக முடியும். அல்லது சமீபத்தில் குற்றவாளியான ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதல்வரா? இந்தக் குழப்பம் மக்களிடம் அதிமாகி இருக்கிறது.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

கூவத்தூரில் பக்கம் நான் போனேன். அந்தப் பக்கம் இருந்த மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினார்கள். இந்த பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசாங்கம் அமைப்பது சரியா?

கிளிப் பேச்சு எம்எல்ஏக்கள்

கிளிப் பேச்சு எம்எல்ஏக்கள்

கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப் பிள்ளை என்று அர்த்தம்.

புரட்சி நிச்சயம்

புரட்சி நிச்சயம்

மறுதேர்தல் மூலமாக திமுகவிற்கு சாதகமாக இருக்குமா அல்லது அதிமுகவிற்கு சாதகமாக இருக்குமா என்று நான் பேசவில்லை. ஜல்லிக்கட்டு நேரத்தில் மாணவர்களிடையே எழுந்த ஒரு புரட்சி போல் இன்னொரு புரட்சி வந்தே தீர வேண்டும். மறுபடியும் இங்கு ஒரு மாற்றம் வர வேண்டும். மறு தேர்தல் வர வேண்டும்.

வீணாக போகட்டும் பணம்

வீணாக போகட்டும் பணம்

மறுதேர்தல் வைத்தால் மக்களின் பணம் வீணாகப் போகும்தான். ஆனால், கூவத்தூர் பக்கமாக வந்தால் 1000 போலீசார் அந்தப் பக்கம் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு யார் சம்பளம் வழங்குவது? அது மக்களுடைய பணம் தானே? எம்எல்ஏக்கள் அங்கு தங்குவது அவர்களுடைய விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்?

மறுதேர்தலே தீர்வு

மறுதேர்தலே தீர்வு

மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர். ஆனால் அந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். யாருடைய மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு பதிலாக மறுதேர்தலை ஏன் நடத்தக் கூடாது?

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

ஒட்டுமொத்தமாக இருவருக்குமே மக்களிடம் முழுமையான ஆதரவு இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் நமக்கு இருக்கு. அதுவரைக்கும் நாம் ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்

English summary
Actor Parthiban seeks re-election to put an end the uncertainty political situation in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X