Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்கே நகரை விடாமல் பிடித்துத் தொங்கும் விஷால்... புது எம்எல்ஏ-விடம் டுவிட்டரில் கோரிக்கை மனு

ஆர்கே நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகளை கூறி கொண்ட நடிகர் விஷால் கோரிக்கை மனுவையும் டுவிட்டரில் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகளை கூறி கொண்ட நடிகர் விஷால் கோரிக்கை மனுவையும் டுவிட்டரில் அளித்துள்ளார்.

ஆர்கே நகரில் போட்டியிட்ட தினகரன் சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Actor Vishal says his full supports TTV Dinakaran

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அவர் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில் அவர் கூறுகையில் ஆர்கே நகரில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தினகரன் விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.
அந்த சூழ்நிலையில் என்னுடைய ஆதரவு தினகரனுக்கு உண்டு என்று தெரிவித்துள்ள அவர், ஆர்கே நகர் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவையும் இணைத்துள்ளார்.

அதில் ஆர்கே நகரில் குடிநீருடன் சாக்கடை நீர் கலத்தல், மீனவர்கள் பிரச்சினை,
விண்ணை முட்டும் குப்பை கழிவுகள், எழில் நகரில் மார்கெட்டில் பணிபுரியும் பெண்களுக்கு கழிப்பறை வசதி இவற்றை எல்லாம் தினகரன் நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை உண்டு என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+