நீ பொறக்கறதுக்கு முன்னாடி இருந்தே நான் ரஜினி ரசிகை... இதுவும் கஸ்தூரிதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அக்கப்போர் என்று கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகருக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பிலிருந்தே நான் ரஜியின் ரசிகை என்று நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது. டீக்கடை முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் இதுதான் பேச்சு. இதை எதிர்ப்பவர்களும் உண்டு, வரவேற்பவர்களும் உண்டு.

Actress Kasthuri says that she is a rajini fan

அந்த வகையில் நடிகை கஸ்தூரி, ரஜினியின் அரசியல் கருத்து குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி காந்த். மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்றும் இந்த முடிவு மிகவும் தாமதமானது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர் ஒருவர், தலைவரை தாக்கி பிரபலமாவது உங்கள் தனிப்பட்ட விஷயம், அதற்காக அவர் ரசிகை என்று சொல்லி ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாருடைய ரசிகை என்று பாபநாசம் ப்ரமோவில் தெரிந்தது என்று டிவீட்டியுள்ளார்.

அதற்கு நடிகை கஸ்தூரியோ, என்ன லாஜிக் பா இது? ரஜினி கூடத்தான் கமலை பாராட்டுறாரு, அப்போ அவரையும் திட்டுவியா? நீ பிறக்கறது முன்னாடி இருந்து நான் ரஜினியின் ரசிகை என்று ரீடிவீட் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தவர் என்பதால் அவரை கமல் ரசிகை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவரோ தான் ரஜினி ரசிகை என்று கூறி ரஜினி ரசிகருக்குப் பதிலளித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Kasthuri says that she is a rajini fan Actress Kasthuri says in twitter that Rajini kanth's political entry is too late. It was opposed by his fan and said that she was accusing Rajini to make her familiar, dont criticise Rajini. Kasthuri retweets that she is a big fan of Rajini before u were born.
Please Wait while comments are loading...