For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தல்: அதிமுகவின் அண்ணா ஊழியர் சங்கம் தோல்வி- அங்கீகாரத்தை இழந்தது!

By Mathi
Google Oneindia Tamil News

நெய்வேலி: என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் ஆளும் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் தோல்வியை தழுவி அங்கீகாரத்தை இழந்தது. மார்க்சிஸ் கட்சியின் சி.ஐ.டி.யூ, திமுகவின் தொ.மு.ச. ஆகிய தொழிற்சங்கங்கள் வென்று அங்கீகாரம் பெற்றுள்ளன.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 11,000க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு, பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 14 தொழிற்சங்கங்கள் உள்ளன.

இந்த தொழிற்சங்கங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். இதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களுக்கு இடையே தேர்தல் நடத்தி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறை.

யார் யாருக்கு ஆதரவு

யார் யாருக்கு ஆதரவு

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. இத் தேர்தலில் சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்திற்கு எச்.எம்.எஸ்., எல்.எல்.எப்., எம்.எல்.எப், டி.எம்.டி.யு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், டி.டி.யு.சி. உள்ளிட்ட 6 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற சங்கமும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் ஆதரவு தெரிவித்தன.

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட தொழிற்சங்கத்தினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே 11,109 தொழிலாளர்கள் வாக்களிக்கும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதற்காக 16 இடங்களில் பூத் அமைக்கப்பட்டிருந்தன.

94% வாக்கு பதிவு

94% வாக்கு பதிவு

மொத்தம் 10, 679 வாக்குகள் பதிவானது. அதாவது 94% சதவீதம் வாக்குகள் பதிவாகின. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

சிஐடியூ, தொமுச

சிஐடியூ, தொமுச

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ. 4,828 வாக்குகளைப் பெற்றது. தொ.மு.ச. 2,426 வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம் சிஐடியூ, தொமுச ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டன.

அங்கீகாரம் இழந்த அதிமுக

அங்கீகாரம் இழந்த அதிமுக

அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 2,035 மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. இதனால் 4 ஆண்டுகாலமாக இருந்து வந்த அங்கீகாரத்தை அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK loses it recognition in NLC trade union elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X