தினகரன் எக்ஸிட்... அக்கப்போர்களை நிறுத்திய ஓ.பிஎஸ், அதிமுக டுவிட்டர் பக்கங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை அவ்வபோது அப்டேட் செய்து வந்த டுவிட்டர் பக்கங்கள் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியதையடுத்து அமைதி காக்கின்றன.

அதிமுகவை சசிகலா கைப்பற்றியதும் கொந்தளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் மேற்கொண்டார். இதனையடுத்து தான் தனியாக செயல்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைக்க 122 எம்எல்ஏக்கள் கூவத்தூரில் 12 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.

டுவிட்டர்

டுவிட்டர்

ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு கருத்துகளை இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் மீடியாக்கள் மூலமே தெரிவித்து வந்தார். இதற்கு அடுத்தப்படியாக அவர் தரப்பு கருத்தை தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் அணி பயன்படுத்திய மற்றொரு சோஷியல் மீடியா டுவிட்டர்.

குயிக் அப்பேட்டுகள்

குயிக் அப்பேட்டுகள்

தங்களது அணியில் யார் எல்லாம் இணையப் போகிறார்கள் என்பதை டுவிட்டர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அப்டேம் செய்து கொண்டே இருந்தது. இதில் குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் இணையப் போவதாக தெரிவித்த சில மணி நேரங்களில் மாஃபா, ஓ.பிஎஸ் அணியில் இணைந்தார்.

டுவிட்டர் பக்கங்கள்

டுவிட்டர் பக்கங்கள்

ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவிப்புகள், பேட்டிகள் என அனைத்தும் டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டதற்கு அதிமுகவின் ஐடி பிரிவு செயலாளராக இருந்த ராமச்சந்திரன் சசிகலாவால் நீக்கப்பட்டதும் காரணமாக சொல்லப்பட்டது. இதே போன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தினகரனின் அடுத்தடுத்த அறிக்கைகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு செயல்பாடுகள் என அனைத்தும் கடந்த 2 மாதங்களாக படுவேகமாக அப்டேட் செய்யப்பட்டது.

முடக்கம்

முடக்கம்

ஆனால் டிடிவி தினகரன் வெளியேறுவதாக கடைசியாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த இரண்டு பக்கங்களிலும் எந்த அப்டேட்டுமே இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று வெளியிட்ட டுவிட்டர் பதிவோடும், தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வீடியோவுடன் அதிமுகவின் டுவிட்டர் பக்கமும் முடங்கிப் போயுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After dinakaran exit from party of admk and o. pannerselvam stops their tweet rivalries,
Please Wait while comments are loading...