For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4-ம் முறையாக அதிமுக வேட்பாளர் மாற்றம்: ராஜன் செல்லப்பா; சிஆர் சரஸ்வதி; ஓஎஸ் மணியன், செம்மலை போட்டி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அறிவித்த அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜன்செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மட்டும் 3 முறை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வேதாரண்யத்தில் ஓ.எஸ். மணியன்; மன்னார்குடியில் காமராஜ் உள்ளிட்டோரும் பின்னர் பல்லாவரம் தொகுதியில் நடிகையும் பேச்சாளருமான சி.ஆர். சரஸ்வதி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலில் அதிமுக 227 இடங்களில் தனித்துப் போட்டி என அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென அருப்புக் கோட்டையில் முத்துராஜா மாற்றப்பட்டு வைகை செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று பகலில் தமிழகத்தில் 7 வேட்பாளர்களும் புதுவையில் 3 வேட்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்தது.

AIADMK Changes 10 Candidates

இதன்படி

சென்னை தி.நகரில் சரஸ்வதி ரெங்கசாமி மாற்றப்பட்டு சத்தியநாரயணா

மேட்டூரில் சந்திரசேகரன் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் செம்மலை

மன்னார்குடியில் சுதாவுக்கு பதிலாக காமராஜ்

காட்டுமன்னார்கோவிலில் மணிகண்டன் மாற்றப்பட்டு முருகுமாறன்

பூம்புகார் தொகுதியில் நடராஜன் மாற்றப்பட்டு எஸ்.பவுன்ராஜ்

வேதாரண்யம் தொகுதியில் கிரிதரனுக்கு பதிலாக ஓ.எஸ்.மணியன்

நாகர்கோவிலில் டாரதி சாம்சனை மாற்றிவிட்டு நாஞ்சில் முருகேசன் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் புதுச்சேரியில் திருபுவனை- சங்கர்; திருநள்ளாறு- முருகையன்; காரைக்கால் தெற்கு- அசனா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை 3-வது முறையாக வேட்பாளர் மாற்ற அறிவிப்பு வெளியானது. அதில் பல்லாவரம் தொகுதியில் சிவி இளங்கோவன் மாற்றப்பட்டு நடிகையும் அதிமுக பேச்சாளருமான சி.ஆர். சரஸ்வதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் 4-வது முறையாக மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக ராஜன்செல்லப்பா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் எம்.எஸ். பாண்டியன் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

English summary
ADMK general secretary and Chief Minister Jayalalithaa on Wednesday changed 10 candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X