For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடக்கிறது - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் எடப்பாடி அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் ஆகியோர் இன்று காலையில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். அப்போது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,

AIADMK govt is BJP’s benami, says TNCC chief Tirunavukkarasar

டெங்குவால் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறிய திருநாவுக்கரசர்,
தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் எடப்பாடி அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் சோனியாகாந்திக்கு வழங்கியுள்ளனர். திருநாவுக்கரசர் தலைவராக தொடர்வதை தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் விரும்பவில்லை. அவரை பற்றி பல்வேறு புகார்களை மேலிடத்துக்கு தெரிவித்து வருகின்றனர். இதனால் இவரை மாற்றிவிட்டு வேறு யாரையாவது நியமிக்கவும் வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் ராகுல்காந்தியுடனான, திருநாவுக்கரசர் சந்திப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Tamil Nadu Congress Committee president Su Thirunavukkarasar on Saturday alleged that the AIADMK government in the state was a “binami government” of the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X