ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு.. தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்- 70 கிராம மக்கள் சேர்ந்து தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்று நெடுவாசலைச் சுற்றியுள்ள 70 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 75 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று கீரமங்கலத்தில் நடைபெற்றது.

Anti-Hydrocarbon project, Neduvasal villager passed resolution

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெடுவாசலில் 75வது நாளாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

50 ஆயிரம் ஆயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் ஜூலை 11ம் தேதி காலை 7 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படு என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nedusaval protest continue till hydrocarbon project abandon, 70 villagers around Neduvasal passed resolution today.
Please Wait while comments are loading...