டாஸ்மாக்கில் கைவரிசையைக் காட்டிய 'பலே' கொள்ளையர்கள்- வீடியோ
கரூர் மலைச்சூர் சாலையில் டாஸ்மாக் கடையில் கொள்ளையர்கள் ஊழியர்களிடம் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டி மூன்று லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கடையில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மலைச்சூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருந்த போதும் கொள்ளையர்கள் மூன்று பேர் வந்துள்ளனர்.

அவர்கள் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன. அவற்றைக் காட்டி டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியுள்ளனர். அதோடு அங்கிருந்த மூன்று லட்ச ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். அபோது அங்கு நிறுத்திவைக்கபப்ட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிச் சென்றனர்.
Recommended Video

Karur: RS.1.5 lakhs worth liquor bottles robbed in tasmac shop
இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அங்கு வந்த போலீசார் டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications