7 மணி நேர கண்ணாமூச்சி... கணவர், சகோதரர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்த அருப்புக்கோட்டை போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை அதிரடி கைது!

  அருப்புக்கோட்டை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி 7 மணி நேரமாக வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சி விளையாடிய நிலையில் அவரது கணவர் சரவண பாண்டி, சகோதரர் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்பு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாவை போலீஸ் கைது செய்தது.

  மாணவர்களுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்கள், வேலியே பயிரை மேய்வது போன்று ஒரு மாபாதக செயல் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளது.

  Aruppukottai ADSP Mathi says that Nirmala Devi will be arrested soon

  அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த கல்லூரியில் கணித துறை பேராசிரியையான நிர்மலா, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் மதுரை பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது குறித்து சிறிதும் வெட்கமின்றி கேட்கும் ஆடியோ காட்சிகள் வெளியாகின.

  இதையடுத்து மாணவிகளுக்கு தவறான பாதையை போதித்த நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று இன்று காலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

  Aruppukottai ADSP Mathi says that Nirmala Devi will be arrested soon

  அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர்.

  இதையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியதில் நிர்மலா தேவி வீட்டுக்குள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்தவுடன் கதவை உடைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டனர்.

  7 மணி நேரங்களுக்கு பிறகு கணவர் சரவண பாண்டி, சகோதரர் மாரியப்பன் உள்ளிட்டோர் கதவை திறந்து சரணடைந்து விடுமாறு செல்போன் மூலம் நிர்மலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் அதை கேட்கவில்லை. இதையடுத்து போலீஸார்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Aruppukottai ADSP Mathi says that Nirmala Devi will be arrested soon.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற