ரஜினி ஜாதகம் அமோகம்.. அரசியலுக்கு வருவது கன்பார்ம்: அடித்து சொல்கிறார் பிரபல ஜோதிடர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இருதினங்கள் முன்பு அரசியல் கருத்துக்களை பேசியிருந்தார். இதனால் மாநிலம் முழுக்க அதுகுறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. ரஜினி வழக்கம்போல சும்மா கூறுவதாக ஒரு தரப்பும், இம்முறை வாய்ப்பு நன்கு இருப்பதால் களமிறங்குவது சரியாக இருக்கும் என்று மற்றொரு தரப்பும் பேசிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு பத்திரிகை, வார இதழ்களில் ஜோதிடம் கணித்துக் கொடுக்கும், ஷெல்வி ரஜினிகாந்த் ராசி பலனை வைத்து கணித்துள்ளதாவது:

ராசி, நட்சத்திரம்

ராசி, நட்சத்திரம்

ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்கனம் கொண்டவர். சனி திசை 19 வருடங்களாக இருந்ததால் அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இம்மாதம், 31ம் தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைகிறது. பிறகு புதன் திசை ஆரம்பமாகிறது.

புதன் திசை

புதன் திசை

ரஜினி ராசிப்படி, புதன்திசையில் கல்வி, ஞானம் தொடர்பான விஷயங்களில் இயல்பாக ஆர்வம் ஏற்படும். இந்த நாட்டம் அரசியலுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது. கல்வி தொடர்பான உதவிகளை மக்களுக்கு அவர் செய்வார்.

அரசியலுக்கு வந்தே தீருவார்

அரசியலுக்கு வந்தே தீருவார்

ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான்.

தனிக்கட்சி

தனிக்கட்சி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு, அவரது உடல் நலத்திலும் நன்கு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். இவர் நியா நானா நிகழ்ச்சியில், ஒருமுறை பங்கேற்று, அதில் வைக்கப்பட்ட சோதனைகளில் சரியாக ஜோதிடம் கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Famous astrologer Shelvi has said that Rajinikanth will coming to politics. His Rasi is co-operating now, he added.
Please Wait while comments are loading...