சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்துள்ளது கொடுமையானது : வைரமுத்து

Subscribe to Oneindia Tamil
  பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி- வீடியோ

  சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு இருப்பது கொடுமையானது என்று கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில், நேற்று போராட்டக்காரர்கள் சிலரால் காவலர்கள் தாக்கப்பட்டனர்.

  Attempt to Murder case on Seeman is Brutal says Vairamuthu

  இதில் தாக்குதலுக்குள்ளான உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இந்த வழக்கு பொய்யானது என்றும், காவல்துறையினரை சீமான் தாக்கவில்லை என்றும் அவருக்கு ஆதரவாக குரல்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சீமானை எந்த விதத்திலும் சீமானை கைது செய்யவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Attempt to Murder case on Seeman is Brutal says Vairamuthu on Twitter. Earlier the TN Police filed complaint of Seeman and his party cadres for attacking a Cop.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற