For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் வெஜ் மக்களுக்கு ஓர் நற்செய்தி... விரைவில் மாநில அந்தஸ்தை பெறப்போகிறது அயிரை!

அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்க அயிரை மீன் குழம்பு பிரியரா?..வீடியோ

    சென்னை: அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

    அசைவ உணவுகளில் பாதகம் இல்லாத ஆரோக்கியமான உணவு வகை என்றார் அது மீன் உணவுகள் என்று பயப்படாமல் சொல்லலாம். அதிலும் மற்ற மீன்களை விட அயிரை மீன் என்றால் அது இன்னும் சிறப்பு. கடுகு சிறுசா இருந்தாலும் காரம் பெருசு என்பது போல, அயிரை சிறுசா இருந்தாலும் அதை குழம்பு அல்லது வறுத்து சாப்பிட்டால் அதன் நச் சுவை நாக்கை விட்டு போகவே போகாது.

     Ayirai Meen is soon getting the State tag Tamilnadu fisheries development university is in the process

    மற்ற மீன்களெல்லாம் நீரோட்டம் செல்லும் திசையில் தான் செல்லும், ஆனால் ஆனால் அயிரை மீன் மற்றும் கெளுத்தி மீன் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் வரும் தன்மை உடையன. அயிரை மீன் நெஞ்சுச்சளி போக்கும் மருத்துவ குணம் மிகுந்தது.

    கேரள மாநிலத்தில் கறிமீனும், தெலுங்கானாவில் முரல் மீனும் அந்த மாநில மீன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிப்பது குறித்து மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

    அதிக விலைக் கொண்ட அயிரை தற்போது கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றபோதும் அயிரை மீனுக்கான தேவை அதிகம் இருக்கிறது. அந்த அளவிற்கு அயிரையின் ருசி மீன் பிரியர்களை விடுவதில்லை.

    English summary
    Tamilnadu fisheries department is in the process of declaring Ayirai Meen as the state fish like Kerala and Andhra declared its own special fish.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X