For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். கூட்டணியில் மீண்டும் திமுக? கருணாநிதியிடம் அழைப்பு விடுத்தார் ஆசாத்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சந்தித்த போது அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற தகவல் ரெக்கை கட்டி பறக்கிறது.

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்தது. மேலும் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி என்றும் திமுக கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் தேமுதிக- திமுக கூட்டணிக்கு எதிராக திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி போர்க்கொடி தூக்கினார். இதனால் திமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்திருக்கிறது.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இந்த பரப்ரப்புகளுக்கு மத்தியில் திடீரென நேற்று இரவு மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் சந்தித்துப் பேசினார்.

வேட்பாளர் தேர்வு குழு தலைவர் ஆசாத்

வேட்பாளர் தேர்வு குழு தலைவர் ஆசாத்

லோக்சபா தேர்தலுக்காக தமிழகம், புதுவை, கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக குலாம்நபி ஆசாத் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் கருணாநிதியை அவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டணி பற்றி பேசலையே..

கூட்டணி பற்றி பேசலையே..

ஆனால் கருணாநிதியுடன் தாம் கூட்டணி குறித்து எதுவுமே பேசவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத் உறுதியாக கூறினார்.

உறவு புதுப்பிப்பு?

உறவு புதுப்பிப்பு?

அதேநேரத்தில் முறிந்துபோன திமுக காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிப்பதற்கான முயற்சியாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

ஆசாத் அழைப்பு

ஆசாத் அழைப்பு

திமுக வட்டாரங்களோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க., மீண்டும் அங்கம் வகிக்க வேண்டும். தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு கருணாநிதி தலைமை வகிக்க வேண்டும். தே.மு.தி.க.,வையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதியிடம் குலாம்நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கின்றன.

மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி?

மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி?

குலாம்நபி ஆசாத்தின் இந்த வேண்டுகோளுக்கு, 'பார்க்கலாம்' என்ற பதிலை மட்டுமே கருணாநிதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணிகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Union health minister and Congress leader Ghulam Nazi Azad on Thursday called on DMK chief M Karunanidhi, triggering speculation about possible revival of ties between the two parties. However, denying that alliance issues figured in their talks, Azad said, "We didn't discuss alliance issues. We will decide when election comes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X