மனக் குறையைக் கொட்டுகிறார் அழகிரி.. ஞானதேசிகனையும் பார்ப்பார்.. இளங்கோவன்!
ஈரோடு: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், வைகோ போன்ற தலைவர்களை வரிசையாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புகளின்போது தனது கஷ்டத்தை அவர் மனம் விட்டு பேசுகிறார். வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகனையும் சந்திப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இளங்கோவன், ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேட்டி கொடுத்தார். அப்போதுதான் இப்படிக் கூறினார்.
இளங்கோவன் பேட்டியிலிருந்து....

அமைதியாக பிரசாரம் செய்கிறோம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி அமைதியான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

வீடு வீடாக போகிறோம்
ஏற்கனவே பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும்.

சோனியா, ராகுலும் வருவாங்களே
தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்யும் தேதி ஏப்ரல் 1, 2 தேதிகளில் முடிவாகும்.

மனக் கஷ்டத்தைப் பேசுகிறார் அழகிரி
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், வைகோ போன்ற தலைவர்களை வரிசையாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புகளின்போது தனது கஷ்டத்தை அவர் மனம் விட்டு பேசுகிறார்.

ஞானத்தையும் சந்திப்பார்
வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகனையும் சந்திப்பார்.

ஆனால் அது தெரியாதே...
புதிய கட்சி தொடங்குவாரா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

அட இவங்ளை விடவா நாங்க ஊழல் செஞ்சுட்டோம்
ஊழல், விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்கிறார்கள். திராவிட கட்சிகளை போல ஊழல் செய்த கட்சிகள் நாட்டில் கிடையாது.

இவங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகலையா...
அதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த பங்காருலட்சுமணன், எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியா செஞ்சிருக்கோமே..
மத்திய காங்கிரஸ் அரசுதான் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. இலங்கையில் 206 கி.மீ தூரத்துக்கு சாலையும், 50 ஆயிரம் வீடுகளையும் கட்டி தந்துள்ளனர்.

ஒரு பவுர்ணமி அமாவாசையாகி விட்டது
பவுர்ணமியாக இருந்த மோடி அலை இப்போது அமாவாசையாக மாறிவிட்டது. அரசியலில் அவருக்கு இனி இருண்ட காலம்தான் என்றார் இளங்கோவன்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications