For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாநாயகர், சிட்டிங் எம்.எல்.ஏ... வரிந்துகட்டும் திருப்பூர் களம்.. அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கே.என்.விஜயகுமார்

திருப்பூர் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.என்.விஜயகுமார்விஜயகுமார்( வயது 59) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டு முதல் கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 1996 - 2001-ஆம் ஆண்டில் திருப்பூர் ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது, திருப்பூர் மாநகராட்சி 4-ஆவது வார்டு கவுன்சிலராகவும், மாவட்ட திட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். திருப்பூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார்.

ப.தனபால்

அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளராக சட்டசபை சபாநாயகர் ப. தனபால் தனபால் (வயது 65)அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சங்ககிரி தொகுதியில் 1977, 1980, 1984, 2001 தேர்தல்களில் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2001-இல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011-இல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் சட்டசபை துணை சபாநாயகரானார். 2012-ஆம் ஆண்டு முதல் சட்டசபை சபாநாயகராக இருந்து வருகிறார்.

சு.குணசேகரன்

திருப்பூர் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் குணசேகரன் (வயது 49) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். அதிமுகவில் 1984-ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1985-ஆம் ஆண்டு 37-ஆவது வார்டு இளைஞர் அணி செயலாளராக பொறுப்பில் இருந்துள்ளார். பிறகு அதே வார்டில் கிளைச் செயலாளராக பதவி வகித்தார். 2012-ஆம் ஆண்டு முதல் திருப்பூர் துணை மேயராக பதவி வகித்து வருகிறார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

கே.பொன்னுச்சாமி

தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. கே.பொன்னுச்சாமி பொன்னுச்சாமி ( வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். 1975 முதல் அ.தி.மு.க.வில் உள்ள இவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக கடந்த 8 ஆண்டுகளாக உள்ளார்.

கே.ராதாகிருஷ்ணன்

உடுமலைப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராக உள்ள கே.ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ( வயது 51) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உடுமலையில் கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார்.

அதிமுகவில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும் ஜெயலலிதா பேரவைத் தலைவர் மற்றும் செயலாளராகவும், திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும், மாநில தேர்தல் பிரிவு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஏ.நடராஜன்

பல்லடம் அதிமுக வேட்பாளராக ஏ.நடராஜன்(வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். 1972-ம் ஆண்டு முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வரும் இவர், மாணவரணி செயற்குழு உறுப்பினர், சென்னிமலைப்பாளையம் கிளைச் செயலாளர், 2012 முதல் தற்போது வரை திருப்பூர் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். 1996 ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 4 முறை கரைப்புதூர் ஊராட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

கே.மனோகரன்

மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் கே.மனோகரன் மனோகரன் (வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1986-91 வரை செல்லப்பம்பாளையம் ஊராட்சித் தலைவராகவும், 1992-95- ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். உடுமலை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

உ.தனியரசு

காங்கேயம் வேட்பாளராக அதிமுக கூட்டணி கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த உ.தனியரசு தனியரசு (வயது 48) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிட்டிங் எம்.எல்.ஏ. இவர் கொங்குவேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். 2009-ல் நடந்த லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். 2011-இல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

English summary
Here the Bio data of Thiruppur Dist.ADMK candidates list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X