For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியைக் கைப்பற்றுகிறார் பொன். ராதாகிருஷ்ணன்.. நக்கீரன் சர்வே

|

கன்னியாகுமரி: பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் வெல்லும் சூழலில் இருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.

இங்கு 2வது இடத்தைப் பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் மோதல் உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 4வது இடத்தையே பிடிக்க முடியுமாம். அவருக்கு டெபாசிட் கிடைப்பதே கஷ்டம் என்ற நிலை.

வாக்களிக்க மக்கள் ஆர்வம்

வாக்களிக்க மக்கள் ஆர்வம்

நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித் துறை, சுங்கான்கடை போன்ற நகர்ப்பகுதிகளில் இதற்குமுன் வாக்களிக்காதவர்கள்கூட, இந்த முறை வாக்களிப்பதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். தேர்தல் ஆணை யத்தின் அதிரடி நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனித்து விடப்பட்ட காங்கிரஸ்

தனித்து விடப்பட்ட காங்கிரஸ்

காங்கிரஸ் வாக்குகளில் கடந்த முறைவரை காங்கிரசுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் போட்டுவந்தனர். ஆனால் இந்த முறை காங்கிரஸ் தனித்து விடப்பட்டது; 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனியாகப் போட்டி யிடுவது, மற்ற கட்சிகளுக்கு இணையாக தங்கள் வாக்குகளை மொத்தமாகப் பதிவுசெய்ய வேண்டும் எனத் தீர்மானமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

சுறுசுறுப்பாக இயங்கும் கம்யூனிஸ்டுகள்

சுறுசுறுப்பாக இயங்கும் கம்யூனிஸ்டுகள்

சி.பி.எம். கட்சி கடந்த முறை டெபாசிட் இழந்த நிலையில், இந்த முறை எப்படியும் அந்த அளவுக்கு மோசமாகிவிடக் கூடாது என்பதில் விழுந்தடித்துக்கொண்டு வேலை செய்திருக்கிறார்கள். முந்திரி ஆலை, தையல் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என தொழிலாளர்கள் மத்தியில் சி.பி.எம். மீது ஒரு அனுதாபம் இருக்கிறது. இதே பரிவு மற்ற மக்களிடம் அவ்வளவாகத் தென்படவில்லை.

முட்டத்தில் பக்காவாக வேலை செய்யும் பாஜக

முட்டத்தில் பக்காவாக வேலை செய்யும் பாஜக

முட்டம் மீனவ கிராமத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இரண்டே இரண்டு ஓட்டுகள்தான் கிடைத்தன. இந்த முறை முதல் முறையாக அங்கு பூத் கமிட்டி அமைத்துள்ளது பா.ஜ.க.

முதலிடத்தில் பொன். ராதாகிருஷணன்

முதலிடத்தில் பொன். ராதாகிருஷணன்

பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவருக்கு 164 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடத்திற்கு திமுக - அதிமுக மோதல்

2வது இடத்திற்கு திமுக - அதிமுக மோதல்

2வது இடத்தைப் பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் மோதல் உள்ளது. இருவருக்குமே தலா 133 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸுக்கு 4வது இடம்

காங்கிரஸுக்கு 4வது இடம்

காங்கிரஸ் கட்சிக்கு 93 பேரின ஆதரவே கிடைத்துள்ளது.

English summary
According to the Nakkeeran survey BJP is leading in Kanniyakumari and DMK,ADMK are fighting for 2nd place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X