கடலூரில் சாலை போட்டதில் ஊழல்.. தமிழக அமைச்சர் எம்சி சம்பத் மீது புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூரில் சாலை போட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பொது நல இயக்கங்கள் மாவட்ட நீதிபதியிடம் மனு அளித்துள்ளன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் எம்.சி. சம்பத். இதனைத் தொடரந்து தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார்.

Case filed against M C Sampath

இந்நிலையில், அவரது தொகுதியான கடலூரில் சாலை போட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பொது நல இயக்கங்கள் கடலூர் மாவட்ட நீதிபதி தனபாலிடம் சாலை போட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றை அளித்துள்ளன.

DMK to use fake news of Karunanidhi's health to get votes : AIADMK Nanjil Sampath | Oneindia News

இது தொடர்பான அமைச்சர் சம்பத் மட்டுமல்லாமல் ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகார் விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அப்போது ஊழல் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர் மேல் ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Public Movements has filed a case against M C Sampath in cuddalore.
Please Wait while comments are loading...